கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி – 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,100 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 16,43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்- அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த அறிவிப்பினால், கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயனடைவார்கள்.

கொரோனா பரவல் மற்றும் புயல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார். முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பால் கடன்பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயனடைவர்.முதல்- அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு விவசாய சங்கங்கள் மற்றும், அரசியல் கட்சிகள், விவசாயிகள் தரப்பில் வரவேற்பு தெரிவித்துள்ளன