பகவத் கீதை எதிராக விமர்சனம் செய்தால் போராட்டம்-ஹெச்.ராஜா.!

சமூக நலன்

பகவத் கீதை எதிராக விமர்சனம் செய்தால் போராட்டம்-ஹெச்.ராஜா.!

பகவத் கீதை எதிராக விமர்சனம் செய்தால் போராட்டம்-ஹெச்.ராஜா.!

புதுக்கோட்டையில், தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஜம்மு – காஷ்மீர் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் சட்ட பிரிவு 370-ஐ திருத்தம் செய்த காரணத்தால் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Picture for #pudukkottai

தொடர்ந்து பேசுகையில் அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியினரும் ஆதரிக்கும் நிலையில், அது குறித்து எதுவும் தெரியாத திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக விமர்சித்தார். இதுபோல் கீழடி ஆய்வில் இன்னும் ஆழமாக 33 அடி தோணடப்படும்போது இன்னும் பல்வேறு விஷயங்கள் தெரியவரும் என்றும் கீழடி அகழாய்வை விரிவுபடுத்தி பெரியளவில் மேற்கொள்ள வேண்டும்; கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை தரும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பகவத் கீதைக்கு எதிராக விமர்சனம் செய்தால் இந்துக்கள் போராட தயங்க மாட்டார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

Comments are closed.