கோவில்களில் ஆடு, கோழிகளை பலிகொடுக்க திரிபுரா உயர்நீதிமன்றம் தடை

சமூக நலன்

கோவில்களில் ஆடு, கோழிகளை பலிகொடுக்க திரிபுரா உயர்நீதிமன்றம் தடை

கோவில்களில் ஆடு, கோழிகளை பலிகொடுக்க திரிபுரா உயர்நீதிமன்றம் தடை

திரிபுராவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் மாதா திரிபுரேஸ்வரி கோயில். இங்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து வழி பட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலில் பலிகொடுக்க தினமும் ஒரு ஆட்டை மாநில அரசு வழங்கி வருகிறது. இதை எதிர்த்து வழக்கறிஞர் சுபாஷ் பட்டாச்சார்ஜி என்பவர் திரிபுரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ‘கோயிலில் விலங்குகளை பலியிடும் நடைமுறை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிறது. மகாராஜா காலத்தில் இருந்தே வழிபாட்டின் ஒரு பகுதியாக விலங்குகள் பலியிடுவது நடந்துவருகிறது. அந்த நடைமுறையை இப்போது நிறுத்தக் கூடாது’ என்று வாதிடப்பட்டது.

இதனை விசாரணைக்குப் பின் கூறிய நீதிபதிகள், ’’இது போன்ற செயல்களுக்கு அரசு பணம் கொடுக்க, இந்திய சட்டத்தில் இடமில்லை. இதுபோன்ற செயல்களை தடுப்பதில் அரசு செயல்பட வேண்டுமே தவிர, உயிர்பலிக்கு அனுமதியளிக்கக் கூடாது. இனி மாநிலத்தில் எந்த இந்து கோயில்களிலும் ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட தடை விதிக்கிறோம். விலங்குகளை கோயில்களுக்கு உயிரோடு தத்துக் கொடுக்கலாமே தவிர பலியிட அனுமதியில்லை. இதை உள்துறை செயலாளர் கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.அதோடு முக்கியமான கோயில்களில் சிசிடிவி கேமரா வைத்து இதைக் கண்காணிக்க வேண்டும் என்றும், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

Comments are closed.