ஏழாவது முறையாக யாசகம் பெற்ற பணத்தை நிவாரன நிதிக்கு வழங்கிய முதியவர் ..!

இந்தியா

ஏழாவது முறையாக யாசகம் பெற்ற பணத்தை நிவாரன நிதிக்கு வழங்கிய முதியவர் ..!

ஏழாவது முறையாக யாசகம் பெற்ற பணத்தை நிவாரன நிதிக்கு வழங்கிய முதியவர் ..!

கொரோனா தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் அளித்துள்ள நன்கொடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதியவரின் பெயர் பூல்பாண்டியன். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் மாட்டுத்தாவணி, காய்கறி மார்க்கெட் பகுதிகளில் தினசரி யாசகம் பெறுவது வழக்கமாம்.

இவர் தாம் பெற்ற யாசகப் பணத்தில் பல நல்ல பணிகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளார் இவர்.
கடந்த ஆறு தடவை ரூ.10 ஆயிரம் வீதம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரன நிதிக்கு வழங்கியுள்ளார் பூல்பாண்டியன், வெள்ளிக்கிழமை ஏழாவது முறையாக ரூ. 10 ஆயிரத்தை வழங்கினார் கொரோனா நிவாரன நிதிக்கு.

Leave your comments here...