வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாநில மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள் : கொடியசைத்து அனுப்பி வைத்த குடியரசுத் தலைவர்..!

அசாம், பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் அளிக்கும் நிவாரணப் பொருட்கள் கொண்ட வண்டிகளை இந்திய குடியரசுத் தலைவர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
राष्ट्रपति कोविन्द ने हाल ही में आई बाढ़ और कोविड-19 महामारी से प्रभावित असम, बिहार और उत्तर प्रदेश के लोगों के लिए राहत सामग्री के नौ ट्रकों को राष्ट्रपति भवन से रवाना किया। स्वास्थ्य मंत्री @DrHarshVardhan और @IndianRedCross के अधिकारी भी इस अवसर पर उपस्थित थे। pic.twitter.com/yG36alflU1
— President of India (@rashtrapatibhvn) July 24, 2020
இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 9 டிரக்குகள் கொண்ட வெள்ள நிவாரணப் பொருட்களை இன்று மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் முன்னிலையில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அசாம், பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான இந்த நிவாரணப் பொருட்கள், டில்லியிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்கு ரயில் மூலமாக ஏற்றிச் செல்லப்பட்டு, அந்த மாநிலங்களில் உள்ள மாநில செஞ்சிலுவைச் சங்க கிளைகள் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும். தார்ப்பாய்கள், கூடாரங்கள், சேலைகள், வேட்டிகள், பருத்திப் போர்வைகள், சமையலறைப் பொருட்கள், கொசு வலைகள், படுக்கை விரிப்புகள் போன்ற பல பொருட்களும், இரண்டு தண்ணீர் சுத்திகரிப்பு யூனிட்டுகளும் இந்த நிவாரணப் பொருட்களில் அடங்கும்.
President Kovind flagged off nine trucks of relief supplies from Rashtrapati Bhavan for the people of Assam, Bihar and Uttar Pradesh affected by recent floods and COVID-19 pandemic. Health Minister @DrHarshVardhan and officials of @IndianRedCross were also present on the occasion pic.twitter.com/kJPyKdVdVV
— President of India (@rashtrapatibhvn) July 24, 2020
இவை தவிர, அறுவை சிகிச்சையின் போது அணியக்கூடிய முகக் கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் கொண்ட கிட்டுகள் கையுறைகள் முகக் கவசங்கள் போன்ற கோவிட் 19 நோய் பாதுகாப்புப் பொருட்களும் இந்த நிவாரணப் பொருட்களில் அடங்கும். குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களால் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவ சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கும், வெள்ள நிவாரண நடவடிக்கைகளிலும், புனரமைப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள முன்னணியில் நின்று பணியாற்றும், இந்திய செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்களுக்கும் பாதுகாப்பு வழங்க உதவும்.
ஏற்கனவே இந்த மாநிலங்களில் உள்ள மாநில செஞ்சிலுவைச் சங்கங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த நிவாரண பொருட்கள் தவிர கூடுதலாக தற்போது இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்திய குடியரசுத் தலைவர் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராவார்.
Leave your comments here...