ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 ஐபிஎல் போட்டிகள்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் ரசிகர்கள் இன்றி தொடரை நடத்தலாம், அல்லது வெளிநாடுகளில் நடத்தலாம் என்று பி.சி.சி.ஐ. திட்டமிட்டது. மேலும், நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இது நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், 2020 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடக்கி நவம்பர் 8 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். துபாய் மற்றும் ஷார்ஜாவில் இந்தப் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். நிர்வாகக்குழு அடுத்த வாரம் கூடி இறுதி விவரங்களை முடிவு செய்யவும், அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ள நிலையில் பி.சி.சி.ஐ இந்தத் திட்டத்தைப் பற்றி அணி உரிமையாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
Leave your comments here...