கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக இந்து மதம் பற்றி அவதூறு : இயக்குநர் வேலு பிரபாகரன் மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார்

தமிழகம்

கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக இந்து மதம் பற்றி அவதூறு : இயக்குநர் வேலு பிரபாகரன் மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார்

கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக இந்து மதம் பற்றி அவதூறு : இயக்குநர் வேலு பிரபாகரன் மீது  இந்து மக்கள் கட்சி  போலீசில் புகார்

கடவுள், நாளைய மனிதன், புதிய ஆட்சி, புரட்சிக்காரன், காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி உள்பட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன்.ஈ.வே.ரா., கொள்கையை பின்பற்றுபவன் என சொல்லிக் கொண்டு, இந்து மத கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் எப்போதும் கேவலமாக பேசுபவர் இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் திணித்து, அதிலும் மத நம்பிக்கையை கெடுக்கும் வேலைகளை செய்து வருபவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன்னை விட 25 வயது இளையவரான நடிகை ஷெர்லிதாசை திருமணம் செய்தார். அவ்வப்போது நாட்டுநடப்புகளை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர், இப்போது கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்திய கறுப்பர் கூட்டம் சுரேந்தரை ஆதரித்தும், இந்து மதத்தை மீண்டும் கேவலமாக பேசியும் பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து இந்து மதத்தையும், மத நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சிப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Leave your comments here...