இந்திய – சீன எல்லையில் நாட்டிற்காக உயிர்நீத்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கிய- தெலுங்கானா அரசு..!

இந்தியா

இந்திய – சீன எல்லையில் நாட்டிற்காக உயிர்நீத்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கிய- தெலுங்கானா அரசு..!

இந்திய – சீன எல்லையில் நாட்டிற்காக உயிர்நீத்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கிய- தெலுங்கானா அரசு..!

இந்திய-சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கின. அந்த வகையில், சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த தெலங்கானாவை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அத்துடன், சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 நிலையிலான அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், வீரமரணமடைந்த சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று நடைபெற்ற நிகழ்சியில் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, மூத்த அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் அவருடன் இருந்ததனர். இதுதொடர்பாக முதல்வர் சந்திரசேகரராவ் கூறும்போது, 4 வயது மகனும், 8 வயது மகளும் உள்ள சந்தோஷி, ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் பணி வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து, முதல்வரின் செயலாளர் ஸ்மித்தா சபர்வாலை, சந்தோஷி அவரது பணிக்கு தயாராகும் வரை அவருக்கு துணையாக இருக்கும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave your comments here...