இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் நிலையை எட்டியது – இந்திய மருத்துவ சங்கத் தலைவர் எச்சரிக்கை

இந்தியா

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் நிலையை எட்டியது – இந்திய மருத்துவ சங்கத் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் நிலையை எட்டியது  – இந்திய மருத்துவ சங்கத் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவில் தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 10000 என்று இருந்த கொரோனா பாதிப்பு இன்று 40000த்தை நெருங்கி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றுகள் காணப்படுகின்றன.

டெல்லி, தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. கேரளாவில் சமூக பரவல் தொடங்கிவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துவிட்டார்.இந்நிலையிலும் நாடு முழுவதும் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று அகில இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவர் சங்க பிரிவான இந்திய மருத்துவமனை வாரிய தலைவர் டாக்டர் மோங்கா கூறியதாவது: கொரோனா பரவல் மடங்குகளில் அதிகரிக்க காரணங்கள் பல உள்ளன என்று கூறியுள்ள அவர், ஆனால் கிராமப்புறங்களுக்கும் பரவியிருப்பது மிக மோசமான நிலையில் உள்ளதை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது சமூக பரவல் தொடங்கியிருப்பதையே காட்டுவதாக மோங்கா குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 10 லட்சத்து 38 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 629 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதும், 26 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதும் கொரோனா தாக்கத்தின் கொரோனா உச்சம் அடைந்திருப்பதற்கான ஆதாரம் என்று மோங்கா எச்சரித்துள்ளார்.

Leave your comments here...