ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தில்

உலகம்

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தில்

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தில்

சீனாவில் முதன்முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று சுமார் 6 மாதமாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 9,70,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட பல நாடுகள், தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அதை மனிதர்களிடம் கொடுத்து, பல்வேறு கட்டங்களில் சோதனை நடத்த வேண்டும். அதன் முடிவுகளை வைத்து தான், அது கொரோனாவுக்கான தடுப்பு மருந்து என்பதை உறுதி செய்ய முடியும்.

அதிலும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது இறுதிக்கட்ட மருந்து சோதனையில் இருக்கிறது. ஆகஸ்ட் இறுதியில் இது பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனும் இதற்கான தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது.இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ இதழ் தி லான்செட் தெரிவித்துள்ளது.இந்நிலையில் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்துள்ள செய்தியில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த கட்டுரை ஜூலை 20 திங்கள் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று வெளியிட்டுள்ளது.ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சோதனை தடுப்பூசி ஆரம்ப கட்ட மனித சோதனைகளைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் நாவலில் இருந்து ‘இரட்டை பாதுகாப்பு’ அளிக்கிறது என்று தெரிவித்தார்

Leave your comments here...