88 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் 88 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம் அருகே பேரையூரில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்டாரம்பட்டி பகுதியில் இருந்து லாரி மூலம் புகையிலைப் பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்று சோதனை செய்தபோது அங்குள்ள ஒரு வீட்டில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்த கதிரேசன்(வயது 35) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட 88 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பேரையூர் போலீஸார் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பேரையூர் போலீஸார் கதிரேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி : Madurai -RaviChandran