தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் எழுத்துக்கள் அதி ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் – – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..!

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஜூலை 3ம் தேதி சீனா ஆக்கிரமிக்க முயன்ற லடாக் எல்லையில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களை சந்தித்தார். எல்லை நிலவரங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே பேசுகிறபோது அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர், ‘படை வீரருக்கான பண்புகள் பற்றி திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்,
எனநான்கே ஏமம் படைக்கு’
பிறகு இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார். “வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.” என்று இதற்கு மு.வரதராசன் தெளிவுரை எழுதியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘என் ஜன்னலுக்கு வெளியே’ என்ற தலைப்பில், தமிழ் வார இதழ் குமுதம் புத்தகத்தில் வெளிவந்த தமது கட்டுரையை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். pic.twitter.com/TzNBrwrdoi
— Narendra Modi (@narendramodi) July 16, 2020
அதில்:- திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Leave your comments here...