ஆறாத ரணமாக இருக்கும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து – 94 குழந்தைகள் பலியான 16ம் ஆண்டு நினைவு நாள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில், ஸ்ரீகிருஷ்ணா என்கிற பெயரில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி மதியம் சமையல் அறையின் மூலம் ஏற்பட்ட தீ பள்ளிமுழுவதும் பரவியதில் 94 குழந்தைகள் கதற, கதற கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தீயில் கருகி உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரை காவிரி ஆற்றுப்பாலம் அருகே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.விபத்து ஏற்பட்ட 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து நினைவு நாளின் போது நினைவு சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்படுவதோடு குழந்தைகளின் நினைவாக ஊர்வரம் நடத்தப்படுகிறது.மேலும் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு விருப்பமான உணவு வகைகளை படைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால்தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர். நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இன்று 16ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
Leave your comments here...