கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய புதிய ரயில்பெட்டிகள் தயாரிப்பு – இந்திய ரயில்வே..!

இந்தியா

கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய புதிய ரயில்பெட்டிகள் தயாரிப்பு – இந்திய ரயில்வே..!

கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய புதிய ரயில்பெட்டிகள் தயாரிப்பு – இந்திய ரயில்வே..!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்திய ரயில்வே பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கொரோனாக்கு எதிரான கருணையற்ற போராட்டத்தை நிலைநிறுத்திடும் வகையில், கபூர்த்தலா ரயில்பெட்டித் தொழிற்சாலையின் இந்திய ரயில்வே உற்பத்திக்கூடம் கொரோனா பிந்தைய ரயில்பெட்டியை உருவாக்கியுள்ளது.

கொரோனா பிந்தைய இந்த ரயில்பெட்டி வடிமமைப்பு மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. கை தொடாமல் இருப்பதற்கான வசதிகள், செம்பு முலாம் பூசப்பட்ட ‘கைப்பிடிகள்’ மற்றும் தாழ்ப்பாள்கள், பிளாஸ்மா மூலம் காற்றுத் தூய்மை மற்றும் டைட்டானியம் டை ஆக்சைட் மேல்பூச்சு ஆகியவற்றுடன் கோவிட் கிருமிகள் இல்லாத வகையில் பயணிகளின் பயணத்திற்கு இதில் வசதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாக்கு பிந்தைய ரயில் பெட்டியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


ஹேண்ட்ஸ்ஃப்ரீ வசதிகள்: கோவிட் – க்குப் பிந்தைய ரயில் பெட்டியில் கைகள் படாமல் பாதத்தால் இயக்கப்படும் தண்ணீர் குழாய், சோப்பு நுரையை வெளியேற்றும் கருவி, பாதத்தால் இயக்கப்படும் கழிவறைக் கதவு (வெளியே), பாதத்தால் இயக்கப்படும் ப்ளஷ் வால்வு, பாதத்தால் இயக்கப்படும் கழிவறைக் கதவுத் தாழ்ப்பாள், வெளியில் வாஷ்பேசின், பாதத்தால் இயக்கப்படும் தண்ணீர்க் குழாய், சோப்பு நுரை வெளியேற்றம் மற்றும் ரயில் பெட்டியின் கதவில் முழங்கையால் இயக்கப்படும் கைப்பிடி..

செம்பு முலாம் பூசப்பட்ட கைப்பிடி மற்றும் தாழ்ப்பாள்கள்: கோவிட்-க்கு பிந்தைய ரயில் பெட்டி செம்பு முலாம் பூசப்பட்ட கைப்பிடிகளையும், தாழ்ப்பாள்களை கொண்டுள்ளது. ஏனெனில், தன் மேல் படும் வைரஸ்களை செம்பு சில மணி நேரங்களில் வீரியம் இழக்கச் செய்கிறது. செம்பு நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. செம்பு மீது வைரஸ் படியும் போது, அதிலுள்ள அயனிகள் மரபணு , நோய்க் கிருமியான வைரசை வெடிக்க வைத்து அதன் உள்ளிருக்கும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏவை அழிக்கிறது.

பிளாஸ்மா காற்று சுத்திகரிப்பு: கொரோனா பிந்தைய ரயில் பெட்டியில் ஏ.சி குழாயில் பிளாஸ்மா காற்று உபகரண வசதி உள்ளது. பிளாஸ்மா காற்று உபகரணம் ரயில் பெட்டிக்குள் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து, ஏ.சி ரயில் பெட்டிகளுக்கு உள்ளே மேற்பரப்புகளில் அயனியாக்கம் செய்யப்பட்ட காற்றை வெளியிட்டு கோவிட் வைரஸ் மற்றும் இதர கிருமிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இந்த ஏற்பாடு அயனியாக்கம் செய்யப்பட்ட காற்றை 100 அயனிகள் /கன செ.மீ முதல் 6000 அயனிகள் /கன செ.மீ வரை மேம்படுத்துகிறது.

டைட்டானியம் டை-ஆக்சைடு மேல் பூச்சு: : கொரோனா-க்கு பிந்தைய ரயில் பெட்டியில் டைட்டானியம் டை-ஆக்சைடு மேல் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. நானோ தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்ட டைட்டானியம் டை-ஆக்சைடு மேல் பூச்சு, ஒளிச்சேர்க்கைப் பொருளாகப் பயன்படுகிறது. இது நீர் சார்ந்ததாகும். இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் வைரஸ், பாக்டீரியா, பூசணம் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைக் கொல்லும்; மிக முக்கியமாக, இது உட்புறக் காற்றின் தரத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. இது நச்சுத்தன்மையற்றது.

இது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (United States Food & Drug Administration – FDA), CE certified. ஆய்வகத்தால் அங்கீகரிக்கப்பட்டது, சி.இ சான்றளிக்கப்பட்டது. டைட்டானியம் டை-ஆக்சைடு, பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது; இது மனிதர்களுக்கு பாதிப்பு அளிக்காது. டைட்டானியம் டை-ஆக்சைடு மேல் பூச்சு வாஷ்பேசின்கள், கழிவறை, இருக்கைகள் மற்றும் ரயில்களில் உள்ள படுக்கை வசதிகள், நொறுக்குதீனி மேசை, கண்ணாடி ஜன்னல், தரை மற்றும் மனிதத் தொடர்புகளில் வரும் ஒவ்வொரு மேற்பரப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆயுள் 12 மாதங்கள் ஆகும்.

Leave your comments here...