கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பிராங்கோ ஜாமின் ரத்து..!

இந்தியா

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பிராங்கோ ஜாமின் ரத்து..!

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பிராங்கோ ஜாமின்  ரத்து..!

கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முளய்க்கல், 2014 முதல் 2016 வரை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ம் ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறினார். அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து, பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைதுசெய்யப்பட்டர்.

அதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் பிராங்கோ முளக்கலை கைது செய்தனர். அவா் மீது கோட்டயம் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், தன் மீது குற்றம் எதுவுமில்லை எனவும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் விசாரணை நீதிமன்றத்தில் முளக்கல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தள்ளுபடி செய்திருந்தது. அதற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்றைய விசாரணைக்கு பாதிரியார் ஆஜராகவில்லை. அவரது வக்கீல், பஞ்சாபில் உள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதிரியார் சிக்கிக்கொண்டதாக கூறினார். ஆனால் வக்கீல் குறிப்பிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இல்லை என்பதால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரது ஜாமினை ரத்து செய்து, உத்தரவிட்டது.

Leave your comments here...