சீனாவின் பித்தலாட்டம் அம்பலமானது – கொரோனா வைரஸ் பரவல் சீனா அரசுக்கு முன்பே தெரியும் – அமெரிக்க தப்பிய சீன பெண் விஞ்ஞானி தகவல்…!

உலகம்

சீனாவின் பித்தலாட்டம் அம்பலமானது – கொரோனா வைரஸ் பரவல் சீனா அரசுக்கு முன்பே தெரியும் – அமெரிக்க தப்பிய சீன பெண் விஞ்ஞானி தகவல்…!

சீனாவின் பித்தலாட்டம் அம்பலமானது – கொரோனா வைரஸ் பரவல்  சீனா அரசுக்கு முன்பே தெரியும் – அமெரிக்க தப்பிய சீன பெண் விஞ்ஞானி தகவல்…!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் உண்மைகளை மூடி மறைத்துவிட்டன என்று ஹாங்காங் பெண் விஞ்ஞானி லீ மெங் யான் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது அப்போது வைரஸ் குறித்த உண்மைகளை வெளியிட்ட மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் திடீரென காணாமல் போயினர்.

இந்நிலையில் கொரோன பற்றிய தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் என சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சீனாவின் ஆட்சிக்கு உட்பட்டஹாங்காங்கை சேர்ந்த மருத்துவர் லீ மெங் யான். ஹாங்காங்பல்கலைக்கழக விஞ்ஞானியான அவர், வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்து வந்தார். ஹாங்காங்கில் இருந்து தப்பி அவர்அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

அங்கு தனியார்தொலைக்காட்சிக்கு லீ மெங் யாங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:_ அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் தான் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியுள்ளார்.அதில், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் பற்றி சீன அதிகாரிகளுக்குத் தெரியும்.கொரோனா தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது.

அப்போதே வைரஸ் பரவலில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். வைரஸ் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.உலக சுகாதார அமைப்புடன் இணைந்திருக்கும் தனது சொந்த நிறுவனம், கொரோனா பற்றி மவுனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாக டாக்டர் யான் கூறினார்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்து ஏப்ரல் 28-ம் தேதி கேத்தே பசிபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன்.சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் அல்லது பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன்.எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சீன அரசு முயற்சிக்கிறது. என்னையும் எனது குடும்பத்தினரையும் குறி வைத்து சைபர் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. ஹாங்காங் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எனது பக்கம் நீக்கப்பட்டுள்ளது.கொரோனா தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமெரிக்கா வந்தேன் என லி மெங் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...