கொரோனா பாதிப்பு ; 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

இந்தியா

கொரோனா தொற்றானது, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

SBI பேங்கிங் மற்றும் பொருளாதார மாநாட்டில் அவர் பேசியதாவது:-

*கொரோனா தொற்று, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

*கொரோனா பாதிப்பு, தற்போதுள்ள உலக ஒழுங்கு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்கள், மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.”

*கொரோனா தொற்றானது, நமது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக, கடந்த பிப்., முதல் ரெபோ வட்டி விகிதங்களை 135 புள்ளிகளை குறைத்துள்ளோம். வளர்ச்சி குறைவை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...