பொருளாதார ரீதியாக சீனாவிற்கு இந்தியா போட்ட தடை – பின் வாங்கும் சீன படைகள்..!

இந்தியா

பொருளாதார ரீதியாக சீனாவிற்கு இந்தியா போட்ட தடை – பின் வாங்கும் சீன படைகள்..!

பொருளாதார ரீதியாக சீனாவிற்கு இந்தியா போட்ட தடை – பின் வாங்கும் சீன படைகள்..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி, திடீரென லடாக் சென்று ஆய்வு செய்தார்.

இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன.

மேலும் அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள், தென் சீன கடல் பகுதிக்கு அதிரடியாக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு, இந்த விமானங்கள், அமெரிக்க கடற்படை கப்பல்களுடன் இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதே பகுதியில், சீன கடற்படையினரும் அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க படையினரின் இந்த பயிற்சி, சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 6 ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் சீன கட்டுமானங்கள் அகற்றப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சீனாவை போல இந்தியாவும் எல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்திற்கு படைகளை விலக்கி கொண்டது.சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் பாங்காங் த்சோவின் விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின்வாங்கியதை காட்டுகின்றன.சமீபத்தில் வெளியான உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், சீன இராணுவம்விரல் 4 பகுதியிலிருந்து ஓரளவு திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது.கண்காணிப்பு செயற்கைக்கோள் ஸ்கைசாட் மூலம் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்ட படங்கள், பாங்காங் த்சோ வழியாக சாலை மட்டப் பகுதிகளிலிருந்து சீனத் படைகள் பின்வாங்குவதை உறுதிப்படுத்தின, இருப்பினும், மலைப்பாதையில் உள்ள பிவோக்குகள் இன்னும் படங்களில் காணப்படுகின்றன. முந்தைய செயற்கைக்கோள் படங்கள் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இரு துருப்புக்களும் தெளிவாக திரும்பப் பெறுவதைக் காட்டின.

Leave your comments here...