கடற்பயண வழிகாட்டுதலில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு சீரமைப்பு – பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்கும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம்..!

இந்தியா

கடற்பயண வழிகாட்டுதலில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு சீரமைப்பு – பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்கும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம்..!

கடற்பயண வழிகாட்டுதலில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு சீரமைப்பு – பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்கும் மத்திய கப்பல்  போக்குவரத்து அமைச்சகம்..!

கடற்பயண மசோதா 2020க்கான உதவி” முன்வரைவை பொதுமக்களின் ஆலோசனைக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அரசாள்கையில் மக்கள் பங்கேற்பை அதிகரித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெறுவதற்கு ஏதுவாக கடற்பயண மசோதா 2020க்கான உதவி முன்வரைவை வெளியிட்டு உள்ளது.

இந்த வரைவு மசோதா 90 ஆண்டுக்கால பழமையான கலங்கரை விளக்கச் சட்டம் 1927, என்பதற்கு மாற்றீடாக முன்மொழியப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள், பயணிக்கும் கப்பலுக்கு வழிகாட்டும் உதவிகள் தொடர்பான இந்தியாவின் சர்வதேச கடமைபொறுப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த வரைவு மசோதா இருக்கிறது.


மத்திய கப்பல் போக்குவரத்து இணையமைச்சர்மன்சுக் மண்டாவியா பழங்கால காலனிய சட்டங்களை மாற்றி அதற்குப் பதிலாக கப்பற்பயண தொழிலில் நவீன மற்றும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற சட்டங்களை கொண்டு வருகின்ற கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின், தானே முன்வந்து மக்களுக்குத் தெரிவிக்கும் அணுகுமுறையின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகள் சட்டத்தின் பிரிவுகளுக்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்று திரு மண்டாவியா மேலும் தெரிவித்தார். கலங்கரை விளக்கச் சட்டம் 1927ன் கீழ்உள்ள சட்டக்கூறுகளின் சிக்கலில் தவித்த கடற்பயண வழிகாட்டுதல் என்பது இனி நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு சீரமைக்கப்படுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சட்ட வரைவு மசோதாவானது, கலங்கரை விளக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விளக்கு கப்பல்களின் தலைமை இயக்குனருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும். இதன் மூலம் கப்பல் சரக்குச் சேவை, கப்பல் இடிபாட்டுக்கு அனுமதி அளித்தல், பயிற்சி மற்றும் சான்றளித்தல், இந்தியா கையெழுத்திட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் ஏனைய கடமை பொறுப்புணர்வை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கான அதிகாரம் கிடைக்கும். பாரம்பரிய கலங்கரை விளக்கங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும்.

இந்த சட்டமசோதாவின் வரைவு கலங்கரை விளக்கம் மற்றும் வழிகாட்டும் விளக்கு கப்பல்களின் தலைமை இயக்குனர் அலுவலக வலைத்தளத்தில் http://www.dgll.nic.in/Content/926_3_dgll.gov.in.aspx, பதிவேற்றப்பட்டு உள்ளது. சட்ட மசோதாவின் வரைவு குறித்த தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பொதுமக்கள் 24-7-2020க்குள் atonbill2020@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம்.

Leave your comments here...