ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சத்ரு சம்ஹார ஸ்கந்த ஹோமம்..!

ஆன்மிகம்

ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சத்ரு சம்ஹார ஸ்கந்த ஹோமம்..!

ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சத்ரு சம்ஹார ஸ்கந்த ஹோமம்..!

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 10.07.2020 வெள்ளிக்கிழமைதேய்பிறை சஷ்டியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகமும், ஆறுமுக ஹோமம் என்கிற சத்ரு சம்ஹார ஸ்கந்த ஹோமமும் நடைபெறுகிறது.

ஒருவர் வழக்கு மற்றும் சட்ட சிக்கல்களிலிருந்து விடுபட முருகப்பெருமானை துதிக்க வேண்டும். ஸ்கந்த வழிபாடு கடன் தொல்லை, நோய்கள் மற்றும் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற மிகவும் உதவும் ஒரு வழிபாடாகும். இவரை பக்தர்கள் ஸ்கந்தன், முருகன், சுப்பிரமண்யர், குமரன், ஸ்வாமிநாதன், கார்த்திகேயன், பால முருகன், வேலன், ஆறுமுகம், ஷண்முகர், என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

மன அமைதி கிடைக்கும் முருக வழிபாடு:

ஞானகுருவான முருகரை வழிபடுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. முருகர், எதிரிகள் / அரக்கர்கள் மனதில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த தனது தாய் பார்வதியிடமிருந்து “வேல்” பெற்று கொண்டார். அந்த சக்தி பொருந்திய வேலை அனைவரும் வழிபாடு செய்கின்றனர். ஞானகுருவான முருகப் பெருமானுக்கு நடத்தப்படும் இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு, மன அமைதி கிடைத்து, செல்வ செழிப்பை தரும். இந்த ஹோமத்தின் மூலம் சக்திமிக்க ஆற்றல் கிடைத்து வெற்றி இலக்கை பெறலாம். கடன்களுக்கு தீர்வும், நோய்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

முருகர் ஹோமம் ஏன் செய்ய வேண்டும்?

மேற்கண்ட சத்ரு ஸம்ஹார ஹோமம் முருகக் கடவுளுக்கு செய்யப்படுவது. முருகர் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியானவர். எனவே இந்த ஹோமம் செவ்வாய்க்கிழமையில் செய்வது விசேஷமானது. மேலும் இந்த ஹோமத்தை சஷ்டி தினத்தன்றும், உங்கள் ஜென்ம நட்சத்திரத்திலும் செய்வது மிகவும் நல்லது. இந்த ஹோமத்தில் பங்கேற்பதால் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறலாம். உங்களது அனைத்து பணிகளிலும் வளர்ச்சியை காணலாம்.

சத்ரு சம்ஹோம ஹார பலன்கள் :

சூரனை சம்ஹாரம் செய்த வீரம் நிறைந்த முருகப் பெருமான், உங்கள் வாழ்வில் தடைகளை நீக்கி உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றுவார். மேலும் எதிரிகளை அழித்து வெற்றி காண செய்வார். பூமி சம்பந்தமான தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். முருகனை போற்றி நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் நன்மை தரும் மாற்றங்களைக் காணலாம். அவருடைய இறை சக்திகளின் மூலம் நம்மூடைய வாழ்வில் வியத்தகு மாற்றத்தை காணலாம்.

இந்த யாகத்தின் மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட கடன்களுக்கு தீர்வு பெருதல், வீடு மனை வாங்குதல் அல்லது விற்பனை Uசெய்தல், புது மனை புகுதல், புதிய அலுவலகம் திறப்பு விழா செய்தல், ரியல் எஸ்டேட் போன்ற பணிகளில் முழுமையாக ஈடுபட்டு பலன் பெறுதல், எதிர்மறை எண்ணங்கள் விலகுதல். சட்டச் சிக்கல்களில் தீர்வு பெறுதல், இரத்த சம்பந்தமான நோய்களில் முன்னேற்றம் காணுதல், எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் தொல்லை நீங்குதல், புத்துணர்ச்சி பெறலாம்.

ஊரடங்கு உத்திரவு உள்ளதால் இந்த யாகத்திற்கு பொது மக்கள் பங்கேற்க அனுமதியில்லை. சங்கல்ப விவரங்களுக்கும் தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

Leave your comments here...