வீடியோ கான்பரன்ஸ் மூலம் 3 நாடுகளின் தூதர்கள் பொறுப்பேற்பு..!

இந்தியா

வீடியோ கான்பரன்ஸ் மூலம் 3 நாடுகளின் தூதர்கள் பொறுப்பேற்பு..!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் 3 நாடுகளின் தூதர்கள் பொறுப்பேற்பு..!

நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் தூதர்கள் இன்று அளித்த அத்தாட்சி கடிதங்களை குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். கொவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் காணொலிக்காடசி வாயிலாக இத்தகைய அத்தாட்சிக் கடிதங்களை அளிக்கும் நிகழ்வு இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து தூதர் மேதகு டேவிட் பைன், பிரிட்டன் தூதர் மேதகு பிலிப் பார்டன், உஸ்பெகிஸ்தான் தூதர் மேதகு அகடோவ் தில்சூட் கமிடோவிச் ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் தமது அத்தாட்சிக் கடிதங்களை அளித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் தகோவிந்த், அவர்கள் நியமனத்திற்கு தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா இந்த நாடுகளுடன் ஆழமான உறவுகளை கொண்டிருப்பதாகவும், முக்கிய உலகப் பிரச்சனைகளில் அவர்களுடன் ஒத்த கருத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 பெருந்தொற்றை திறம்பட சமாளிக்க உலக அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியம் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

Leave your comments here...