பாகிஸ்தானை புகழும் சரத்பவாருக்கு பிரதமர் மோடி பதிலடி…!!
- September 20, 2019
- jananesan
- : 804
மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம், நவம்பருடன் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்த மாதம், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு, இன்னும் வெளியாகாத நிலையில், அரசியல் கட்சிகள், பிரசாரத்துக்கு தயாராகி வருகின்றன. பா.ஜக பிரசாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். நாசிக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசினார். அதில்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு, நாடு முழுவதும் உள்ள மக்கள், ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில், ஒட்டு மொத்த நாட்டு மக்களும், ஒரே மனநிலையில் செயல்பட்டபோது, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும், வேறு மாதிரியான கருத்துகளை தெரிவித்தன. பாகிஸ்தானைப் பெருமைப்படுத்தி பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மீது மோடி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
பாகிஸ்தானை புகழ்ந்த சரத்பவார் அந்நாட்டு மக்கள் இந்தியர்களை உறவினர்களாக மதிப்பதாக தெரிவித்துள்ளார். பலமுறை தாம் பாகிஸ்தான் போனபோது தம்மை அன்பாக உபசரித்தார்கள் என்றும் பாகிஸ்தான் தமக்கு பிடித்த நாடு என்றும் சரத்பவார் கூறியிருந்தார். இதற்கு மோடியிடமிருந்து கடுமையான பதிலடி வந்தது.காங்கிரஸ் கட்சியின் குழப்பம் புரிந்துக் கொள்ளக்கூடியது, ஆனால் சரத்பவார் மாதிரியான அனுபவம் மிக்க மூத்த தலைவர்களும் பாகிஸ்தானுக்கு சாதகமாக பேசுகிறார்கள் என்று மோடி விமர்சித்தார். முஸ்லீம் வாக்காளர்களைக் கவருவதற்காக தவறான கருத்துகளை வெளியிடுகிறார்கள் என்றும் மோடி கூறினார். அண்டை நாட்டை நேசிப்பதாக கூறும் சரத் பவாரை சாடிய மோடி, தீவிரவாதத்தின் மையமாக அந்நாடு இருப்பதை உலகமே அறியும் என்று கூறினார்.
..நமது நிருபர்