சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது..!

தமிழகம்

சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது..!

சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது..!

துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தனர்.போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றச்சாட்டு எழுப்பியதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 5 பேரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார்.அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

Leave your comments here...