கண்ணீர் விடும் சீனா நிறுவனங்கள் – டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் “₹45,000” கோடி வருமானம் இழப்பு..!

இந்தியாஉலகம்

கண்ணீர் விடும் சீனா நிறுவனங்கள் – டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் “₹45,000” கோடி வருமானம் இழப்பு..!

கண்ணீர் விடும் சீனா நிறுவனங்கள் – டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால்  “₹45,000” கோடி வருமானம் இழப்பு..!

டிக்-டாக் செயலிகள் மீதான தடையால் ‘பைட்-டான்ஸ்’ நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சீன ஊடகமான Global Times, இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் ( 6 பில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை விதித்ததால் சீன நிறுவனங்கள் பலவற்றிற்கு இழப்பீடு ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அதில், பைட் டான்ஸ் – டிக் டாக்கின் தாய் நிறுவனம் அதிகம் பாதிப்படையவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.டிக் டாக் நிறுவனத்தின் வருமானத்திற்கு இந்தியா மிகப்பெரிய காரணமாக இல்லாத போதிலும், இந்தியாவில் டிக் டாக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் இந்த நிலை எனவும் இந்தியாவில் செயல்படும் தங்கள் கிளை நிறுவனங்களான டிக் டாக் மற்றும் ஹெலோ ஆப்பிற்காக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100 கோடி அமெரிக்க டாலர்களை பைட் டான்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்சார் டோவர் என்ற செல்போன் செயலிகள் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் ‘சென்சார் டூவர்’ நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 100 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சீன செயலிகள் மீதான தடையால் டிக்-டாக்செயலியின் தாய் நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’ நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும்“ என்றுள்ளனர்.

Leave your comments here...