தமிழகம் முழுவதும் இன்று முதல் கிராமப்புற கோவில் பக்தர்களுக்கு அனுமதி : என்னென்ன கடைபிடிக்க வேண்டும் தெரியுமா…?

தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் கிராமப்புற கோவில் பக்தர்களுக்கு அனுமதி : என்னென்ன கடைபிடிக்க வேண்டும் தெரியுமா…?

தமிழகம் முழுவதும் இன்று முதல் கிராமப்புற கோவில் பக்தர்களுக்கு அனுமதி :  என்னென்ன கடைபிடிக்க வேண்டும் தெரியுமா…?

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கிராமப்புற கோவில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் வழிபட தொடங்கியுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள :- கோயில் வளாகத்தில் திருமணம் நடந்தால், 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு திருமணம் மட்டுமே நடக்க வேண்டும்

*திருவிழா, ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை. வழிபாட்டு வளாகத்தை சுற்றி 3 மணி நேரத்துக்கு ஒரு முறை, 1% சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் தெளிக்க வேண்டும்.

கோயில் குளத்துக்குள் இறங்க அனுமதி இல்லை. பாக்கெட் பிரசாதங்களுக்கு அனுமதி உண்டு. கோயில் வளாகத்தில் பிரசாதம் சாப்பிடக் கூடாது.

இயல்பு நிலை திரும்பும் வரை, பக்தர்களின் அங்கபிரதட்சணம் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

உள்ளூர் பக்கதர்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றனர். கோயில் வளாகத்தில் உள்ள தங்கும் அறைகள் திறக்க அனுமதி இல்லை.

காற்றோட்ட வசதிகளுக்கான வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். முடிந்தால் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும்.

இந்து கோயில்களில் 100 சதுர மீட்டர் இடத்துக்குள், 20 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

தேங்காய், பூ, பழம் வழங்க அனுமதி இல்லை.அன்னதானம் வழங்கும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

தொற்று அறிகுறியுடன் கூடிய சந்தேக நபர், அல்லது தொற்று உறுதி செய்யப்பட்டவர் வழிபாட்டு தலங்களுக்குள் வந்தால், அவர்களை தனி அறையில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலி பரப்பலாம். தொற்று பரவும் என்பதால், பக்தர்கள் குழுவாக பாட்டுப்பாட அனுமதிக்க கூடாது.

வழிபாட்டு தலங்களுக்குள் பிரசாதம் வழங்குதல், புனித நீர் தெளிப்பதற்கு அனுமதி இல்லை:வாகன நிறுத்தும் இடங்களில், சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

காலணிகளை வாகனத்திலேயே வைக்க வேண்டும். தேவைப்பட்டால், தனி இடத்தில் போதிய சுகாதார ஏற்பாடுகளுடன் பராமரிக்க வேண்டும்.

#COVID19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த போஸ்டர்கள், பேனர்கள் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும். ஆடியோ, வீடியோ மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:

கைகள் சுத்தமாக இருந்தாலும், சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஆல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைகுட்டையால் வாய், மூக்கை முட வேண்டும்:

வழிபாட்டு தலங்களின் நுழைவு வாயிலில் ஆல்கஹால் கிருமிநாசினி அவசியம். முடிந்தால், உடல் வெப்ப பரிசோதனைக் கருவி பயன்படுத்த வேண்டும்.

தொற்று அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்:

எனினும், கிராமங்களில் உள்ள பெரிய கோவில்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Leave your comments here...