10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட “சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையம்” – முன்னேற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு.

டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் கூடிய ‘’ சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி ராதா சுவாமி சத்சங் பீஸ்-ல் 10,000 படுக்கைகளுடன் அமைந்துள்ள ‘’ சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தில்’’ மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் பற்றி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ‘’10,000 படுக்கைகளுடன் கூடிய இந்த மையம் டெல்லி மக்களுக்கு பெரிய நிவாரணத்தை வழங்கக்கூடியதாக இருக்கும்’’ என்று அமித்ஷா கூறினார்.
Reviewing preparedness of 10,000 bed 'Sardar Patel COVID Care Centre' at Radha Swami Satsang Beas in Delhi. https://t.co/T7DsKcFH70
— Amit Shah (@AmitShah) June 27, 2020
இந்தச் சிக்கலான நேரத்தில், இத்தகைய கொரோனா கவனிப்பு மையத்தை இயக்கி வரும் இந்தோ-திபெத் எல்லை காவல்படையினரை நான் பாராட்டுகிறேன். டெல்லி மக்களுக்கும் அதன் மூலம் நாட்டுக்கும் சேவை புரியும் ஈடுபாட்டு உணர்வு ஒப்பிட முடியாததாகும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க உறுதி பூண்டுள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.
Visited the 'Sardar Patel COVID Care Centre' in Delhi to review its preparedness.
I thank Radha Soami Satsang Beas and all others who helped to create this huge Covid care facility.
This 10,000 bed centre would provide huge relief to the people of Delhi. pic.twitter.com/qB0OrP5vxY
— Amit Shah (@AmitShah) June 27, 2020
இந்த மிகப்பெரிய கொரோனா கவனிப்பு வசதியை உருவாக்கியதில் உதவிய ராதா சுவாமி சத்சங்க் பீஸ் மற்றும் இதர பிரிவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்தார். மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன்ரெட்டி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
I applaud our courageous @ITBP_official personnel, who would be operating this Covid Care facility during these trying times. Their commitment to serve nation and people of Delhi is unparalleled.
Modi govt at the centre is committed to provide all possible help to its citizens. pic.twitter.com/p5RaDomna4
— Amit Shah (@AmitShah) June 27, 2020
Leave your comments here...