ஊரடங்கு காலத்தை சரியாக பயன்படுத்திய ரயில்வேதுறை: 200மேற்பட்ட நீண்டகால பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவு..!

இந்தியா

ஊரடங்கு காலத்தை சரியாக பயன்படுத்திய ரயில்வேதுறை: 200மேற்பட்ட நீண்டகால பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவு..!

ஊரடங்கு காலத்தை சரியாக பயன்படுத்திய ரயில்வேதுறை:  200மேற்பட்ட நீண்டகால  பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவு..!

கொரோனா தொற்றுநோய் காரணமாக பயணிகள் சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டதை வாய்பாகப் பயன்படுத்தி இந்திய ரயில்வேயின் பணி வீரர்கள், ரயில்வே பணிமனையைப் புனரமைத்தல், பழைய பாலங்களைப் பழுதுபார்த்து மறுசீரமைத்தல், இரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவதுடன் மின்மயமாக்குதல் மற்றும் தண்டவாள மாற்று வழித்தடங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நீண்டகாலப் பராமரிப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த முடிக்கப்படாத திட்டங்கள் பெரும்பாலும் இந்திய ரயில்வே எதிர்கொண்ட தடைகளாக இருந்து வந்தன.ரயில் சேவையை பாதிக்காமல் இந்தப் பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்கு ‘வாழ்வில் ஒரே முறை கிட்டும் வாய்ப்பு’ என்று கருதி ஊரடங்கு காலத்தில் அவைகளை நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்தப் பணிகளில் தடைகளை நீக்குவதற்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் 82 பாலங்களை புனரமைத்தல் / மறுசீரமைத்தல், லெவல் கிராசிங் கேட்டுக்கு பதிலாக பாலத்தின் கீழ் 48 வரையறுக்கப்பட்ட உயரம் கொண்ட சுரங்கப்பாதை / சாலை அமைத்தல், 16 நடைபாலம் கட்டுதல் / வலுப்படுத்துதல், 14 பழைய நடைபாலம் அகற்றுதல் , 7 மேம்பாலம் தொடங்குதல், 5 பணிமனை மறுவடிவமைப்பு, 1 இரயில் பாதையை இரட்டித்து மின்மயமாக்கல் மற்றும் 26 இதர திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முக்கிய திட்டங்களில் சில பின்வருமாறு –

ஜோலர்பேட்டையில் (சென்னை பிரிவு, தெற்கு ரயில்வே) பணிமனைப் புனரமைப்புப் பணிகள் மே 21, 2020 அன்று நிறைவடைந்தன. இந்த வளைவைச் சரி செய்ததின் மூலம் பெங்களூரு முடிவில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வேகத்தை அதிகரிப்பதற்கும் ஒரே நேரத்தில் எளிதாக வரவேற்பதற்கும், அனுப்புவதற்கும் வழிவகுத்தது.

அதேபோல் லுதினானாவில் (ஃபிரோசெபூர் பிரிவு, வடக்கு ரயில்வே) பழைய கைவிடப்பட்ட பாதுகாப்பற்ற நடைப்பாலத்தை அகற்றும் பணி மே 5, 2020 அன்று நிறைவடைந்தது.

துங்கா நதியில் (மைசூரு பிரிவு, தென்மேற்கு ரயில்வே) பாலத்தை மீண்டும் கட்டும் பணி மே 3, 2020ஆம் தேதி நிறைவடைந்தது.

வடகிழக்கு ரயில்வேயின் வாரணாசிப் பிரிவில் ரயில்வே பாதைகளை மின்மயமாக்கலுடன் இரட்டிப்பாக்கும் இரண்டு திட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி நிறைவடைந்தன.

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் அணுகுமுறையில் 8 ரயில் தடங்களை கடக்கும் மேம்பாலங்களை அகற்றும் பணி மே 9, 2020 அன்று நிறைவடைந்தது.

தென் மத்திய ரயில்வேயின் விஜயவாடா பிரிவில் இரண்டு புதிய பாலங்கள் கட்டும் பணிகள் மே 3ஆம் தேதி நிறைவடைந்தன.

ஹவுரா-சென்னை வழித்தடத்தில், கிழக்குக் கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலைப் பிரிவில் லெவல் கிராசிங்கை அகற்றி, வரையறுக்கப்பட்ட உயரம் கொண்ட சுரங்கப்பாதை கட்டும் பணி மே 9, 2020 அன்று நிறைவடைந்தது, இதன் விளைவாக ரயில்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பு அதிகரித்தது.

அதேபோல், விஜயவாடா மற்றும் காசிப்பேட்டை பணிமனைகளில் (விஜயவாடா பிரிவு, தென் மத்திய ரயில்வே) நிலையான முன்-அழுத்த கான்கிரீட் (PSC) தளவமைப்புடன், மர தண்டவாள மாற்று வழித்தடங்களை புதுப்பித்தல் பணி முடிவடைந்தது.

திலக் நகர் நிலையத்தில் (மும்பை பிரிவு, மத்திய ரயில்வே) ஆர்.சி.சி பெட்டியை நிறுவும் பணி மே 3ஆம் தேதி 28 மணி நேரப் பணியாகவும் 52 மணி நேரப் பணியாகவும் இரண்டு மெகா தொகுதிகளில் முடிக்கப்பட்டது.

பினாவில் காலியாக உள்ள ரயில்வே நிலத்தில், சூரியசக்தியால் ரயில்களை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட புதுமையான திட்டம் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த 1.7 மெகா வாட் திட்டம் 25 கிலோவோல்ட் மின்சாரத்தை ரயில்வே மின்வழித் தடத்திற்கு நேரடியாகச் செலுத்த இந்தியன் ரயில்வே மற்றும் பாரத் கனரக மின்னணு நிறுவனம் (BHEL) ஆகியவை இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியாகும்.

Leave your comments here...