காஷ்மீரில் மசூதியில் புகுந்த தீவிரவாதிகள் : கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி..!

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அவ்வப்போது பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவின் பாம்பூர் பகுதியில் உள்ள மீஜில் பகுதியில் நேற்று பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது பதுங்கி இருந்த பயஙகர்வாதிகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லபட்டார். இரண்டு பேர் அருகிலுள்ள மசூதிக்குள் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து, மசூதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் இன்று காலை, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். மசூதியிலிருந்து வெளியேறிய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது மொத்தம் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஷோபியனில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அதே சமயம் புல்வாமாவில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

Leave your comments here...