லடாக் பிரச்னை குறித்து சர்ச்சை ட்வீட்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் அதிரடியாக இடைநீக்கம்..!

இந்தியாதமிழகம்விளையாட்டு

லடாக் பிரச்னை குறித்து சர்ச்சை ட்வீட்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் அதிரடியாக இடைநீக்கம்..!

லடாக் பிரச்னை குறித்து சர்ச்சை ட்வீட்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் அதிரடியாக இடைநீக்கம்..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா அட்டூழியத்தால், வீரமரணம் அடைந்தவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர். இவர் ராணுவத்தில் ஹாவில்தாராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த மார்ச் 28-ஆம் தேதி பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக்கால நிவாரண நிதி (பிஎம் கோ்ஸ்) உருவாக்கப்பட்டது. கொரோனா பிரச்சினையைச் சமாளிப்பதற்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிதியின் தலைவராக பிரதமர் இருப்பார். பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே பிரதமா் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது, புதிதாக இந்த நிதி உருவாக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், இதுபோன்ற தேசிய அளவிலான பேரிடர், பிரச்சினைகள் எழும்போது பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கே நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்படும்.

இந்நிலையில் லடாக் பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் ட்வீட் பதிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மருத்துவர் மது தொட்டபிளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.லடாக் பிரச்னை மற்றும் பிஎம் கோ்ஸ் ஆகியவற்றைக் குறித்து தவறான கருத்தை வெளிப்படுத்தியதாகக் கூறி சிஎஸ்கே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபற்றி சிஎஸ்கே ட்வீட் வெளியிட்டுள்ளதாவது:மது தொட்டபிளில் வெளியிட்ட ட்வீட் குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அறிந்திருக்கவில்லை. சிஎஸ்கே அணியின் மருத்துவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படாமல் வெளியிடப்பட்ட அவருடைய தவறான ட்வீட்டுக்காக வருந்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...