தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்..!

தமிழகம்

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்..!

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.

தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளராக இருந்த தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.கொரோனா தொற்று அவருக்கு உறுதியானதும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும், நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான விபி கலைராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அதிமுக உடைந்தபோது தினகரன் அணிக்குச் சென்று அங்கு ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக திமுகவில் இணைந்தார். திமுகவில் முக்கிய நிர்வாகியான இவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெ. அன்பழகன்(61) சமீபத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், இப்போது இவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...