திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 நாளில் பக்தர்கள் அளித்த காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. மத்திய அரசின் சில தளர்வுகள் காரணமாக 8ந்தேதி முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியது. ஆந்திர அரசும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் 10-ந்தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டர்கள். 11-ந்தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டர்கள்.80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதியில்லை.
Sarva Darshan tickets Counter waiting at Alipiri Bhudevi Complex and Thermal Screening at Tirumala. pic.twitter.com/eLTunKV6VV
— GoTirupati (@GoTirupati) June 13, 2020
தினமும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிட்டு 3000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட இருக்கிறது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் கவுண்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படும்.ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையான தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
Sri Venktaeswara Swamy Darshan Arrangements, Tirumala pic.twitter.com/ldizM3m3U4
— GoTirupati (@GoTirupati) June 12, 2020
தற்போது ஊரடங்குக்குப் பின் நடைதிறந்த முதல் நாளில் 43 லட்சம் ரூபாயும், இரண்டாவது நாளில் 40 லட்ச ரூபாயும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.பணம் தவிர, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நாணையங்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டுள்ளன.ஊரடங்கிற்கு முன்னதாக சுமார் 3.5 கோடி வரை தினமும் உண்டியல் மூலம் காணிக்கை கிடைக்கும் நிலையில், தற்போது இந்த வகை வருமானம் சரமாரியாக குறைந்துள்ளது.பக்தர்களின் வருகை வெறும் 10 சதவீதம் தான் என்றாலும் உண்டியல் காணிக்கை மட்டும் குறையவில்லை. ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக. பல்வேறு தொழில்களும் முடங்கிக் கிடக்கும் நிலையில், ஏழுமலையானுக்கு காணிக்கை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கும் பக்தர்களால் கோவிலின் உண்டியலில் பண மழை கொட்டுகிறது.
Leave your comments here...