வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த திராவிட முன்னேற்ற கழகத்தின் சதிச் செயல் – அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு…!

தமிழகம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த திராவிட முன்னேற்ற கழகத்தின் சதிச் செயல் – அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு…!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த திராவிட முன்னேற்ற கழகத்தின் சதிச் செயல் –  அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு…!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த திராவிட முன்னேற்ற கழகத்தின் சதிச் செயல்களுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.!

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கையில்:-

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை.இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

சட்டத்தின் விதிகள்கீழ்க்காணும்குற்றச்செயல்களுக்கு‍ இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்:

சாதியை கொச்சைப்படுத்தி பேசுதல்
சாதி பெயரை சொல்லி திட்டுவது
சாதியின் பெயரால் விலக்கி கொள்வது.

சமீபகாலமாக திமுக முக்கிய பொறுப்பாளர்கள் , நிர்வாகிகள், பேச்சாளர்கள், பட்டியலின மக்களை கொச்சையாக பேசுவதும், பிறகு இல்லை என மறுப்பதும் வாடிக்கையாக உள்ளது.பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது .அன்பகத்தில்ல் பேசிய அவரது உரையில், தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திராவிட கட்சிகள் போட்ட பிச்சை என்றும் அதற்கு திமுக காரணம் எனவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஆதிதமிழர் மக்கள் பேரவை தலைவர், கல்யாண், மார்ச் மாதம், காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு அதிகாலை சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குகள் பாய்ந்தது . போலீசார் அழைத்துச் செல்லும் போது நிருபர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பிப்ரவரி 15ஆம் தேதி நான் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது. அதற்காக இப்போது வந்து கைது செய்வது உள்நோக்கமுடையது என்றார்.

இதனிடையே, எழும்பூர் நீதிமன்றத்தில், நீதிபதி செல்வகுமார் முன்னிலையில், ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிட்ட வக்கீல்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது தேவையற்றது. அதுவும், கொரோனா காலத்தில், இதுபோன்ற கைது தேவையில்லை என வாதிட்டனர். இதையேற்ற நீதிபதி, மே 31ம் தேதி வரை, இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எனவே ஜூன் 1ம் தேதி வழக்கமான ஜாமீனுக்கு விண்ணப்பிக்க ஆர்.எஸ்.பாரதி தரப்பு முடிவு செய்தனர்.ஆனால், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், சரண் அடையும் நாளிலேயே தனது ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மீனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். அதன்படி இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.தனக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து இந்த சட்டத்தை திமுக வினர் நீர்த்து போக செய்தனர், இது மிக பெரிய தவறான முன்னுதாரணமாக அமைந்தது.

இனி வரும் காலங்களில் இது போன்று பட்டியலின மக்களைஅவமானமாக பேசியவர் கைது செய்யப்பட்டாலும், இந்த தீர்ப்பினை வைத்து உடனடியாக ஜாமீன் பெறக் கூடும்.. இது தவறான பாதைக்கு எடுத்து செல்லும்.ஆகையால் திரு. ஆர்.எஸ் பாரதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஜாமின் களை ரத்து செய்து உடனடியாக அவரை கைது செய்து,நீதியை நிலைநாட்ட வேண்டும். பட்டியலின மக்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...