75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்தளித்தார்.
கவர்னர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர் இறையன்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சபாநாயகர் அப்பாவு, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்அழகிரி, பாமக தலைவர் ஜிகேமணி, பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் எம்எல்ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:- மாநில அரசின் நடவடிக்கைகளால் பல துறைகளில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். உங்கள் அனைவரிடமும் கடின உழைப்பு, வெளிப்படை தன்மை கொண்ட ஆட்சியை மக்களுக்காக எதிர்பார்க்கிறேன் எனவும் கூறினார்.
Leave your comments here...