தான் வளர்த்த 2 யானையின் பேரில் சொத்தை எழுதி வைத்த அக்தர் இமாம் – குவியும் பாராட்டுகள்..!

இந்தியாசமூக நலன்

தான் வளர்த்த 2 யானையின் பேரில் சொத்தை எழுதி வைத்த அக்தர் இமாம் – குவியும் பாராட்டுகள்..!

தான் வளர்த்த 2 யானையின் பேரில் சொத்தை எழுதி வைத்த அக்தர் இமாம்  – குவியும் பாராட்டுகள்..!

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் யானைக்கு இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாட்னாவைச் சேர்ந்த விலங்கு காதலரான அக்தர் இமாம் தனது முழு சொத்தையும் தனது இரண்டு யானைகளான மோதி மற்றும் ராணிக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அக்தர் கூறுகையில், விலங்குகள் மனிதர்களைப் போலல்லாமல் உண்மையுள்ளவை ஆகும். எனது யானைகளின் பாதுகாப்பிற்காக நான் பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். என் மரணத்திற்குப் பிறகு என் யானைகள் அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை என அக்தர் தெரிவித்தார்.

Leave your comments here...