ஏழை எளிய மக்களுக்கு தமுமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் உதவி..!

தமிழகம்

ஏழை எளிய மக்களுக்கு தமுமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் உதவி..!

ஏழை  எளிய மக்களுக்கு தமுமுக சார்பில்  அத்தியாவசிய பொருட்கள் உதவி..!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர தமுமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவிகள் வழங்கப்பட்டது.நகர தலைவர் சேக் செய்யது அலி தலைமை தாங்கினார். நகர செயலாளர் அஜ்மீர் ஹாஜா,
பொருளாளர் முகம்மது ஹக்கீம், நகர துணை தலைவர் முஹம்மது ஹாஜி, தொண்டரணி செயலாளர் முகம்மது கனி, அச்சன்புதூர் நகர செயற்குழு உறுப்பினர் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக செங்கோட்டை தாசில்தார் திருமதி கங்கா, மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிஃப், மாவட்ட துணை செயலாளர் அச்சன்புதூர் ரஜாய் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

பல ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் இலவச முககவசம் வழங்கப்பட்டது. இறுதியாக நகர துணை செயலாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.

Leave your comments here...