10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி – முதல்வர் பழனிசாமி ..!

தமிழகம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி – முதல்வர் பழனிசாமி ..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி –  முதல்வர் பழனிசாமி ..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கிடையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வைத்து இருக்கிறது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தை அடுத்து முதல்வர் வீடியோ வாயிலாக பொதுத்தேர்வு தொடர்பாக உரையாற்றினார்.

அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், ஒத்திவைக்கப்பட்ட 11-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.பிளஸ் 2 மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாகவும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Leave your comments here...