76 நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு..!!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் UNLOCK1.0 என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது. அதன்படி, ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளை வருகிற 8ஆம் தேதி முதல் திறந்து கொள்ளலாம் என வழிகாட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி மால்களுக்கு செல்லும் பொதுமக்கள், அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் அனைத்து நுழைவு வாயில்களிலும் வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கு தளர்வுக்கு பின் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சோதனை முறையில் 2 நாட்கள் தேவஸ்தான பணியாளர்களும், புதன்கிழமை உள்ளூர் பக்தர்களும், அதனை தொடர்ந்து 11-ந்தேதி வியாழக்கிழமை முதல் ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், கவுண்டர்களில் டிக்கெட் பெற்ற 3 ஆயிரம் பக்தர்கள் என தினமும் 6 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் 76 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. மாஸ்க் அணிந்து வர வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை பக்தர்கள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave your comments here...