சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்கவில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் புகார்…!!
- August 30, 2019
- jananesan
- : 883
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்னர் பல முறை சிலை கடத்தை தடுப்பு பிரிவினரிடம் இருந்து தனக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என பொன்மாணிக்கவேல் புகார் கூறியிருக்கிறார். சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் நீதிமன்றம் செல்லும் அதிகாரிகளுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் தமிழக அரசு செய்து தரவில்லை என்றும் கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை சிலை கடத்தல் தொடர்பான புகார்களில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என புகார் தெரிவித்த பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளின் முதற்கட்ட விசாரணையை சிறப்பு அதிகாரி குழு நடத்தக்கூடாது என்றும் வழக்கின் ஆவணங்களை கொடுத்தால் பணியிடை நீக்கம் செய்துவிடுவதாக ஆய்வாளர்களை, ஏடிஜிபி ஒருவர் மிரட்டுவதாகவும், இது நாடா…? இல்லை காடா…? என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வேதனை தெரிவித்தார்.
பொன் மாணிக்கவேலின் புகாரை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீதிமன்றம் உத்தரவிட்டும் சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி குழுவுக்கு அடிப்படை வசதிகளை செய்யாதது ஏன்..? சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலக துப்புரவு பணியாளர்களுக்கு கூட தமிழக அரசால் ஊதியம் வழங்க முடியாதா? எனவும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி முதற்கட்ட விசாரணை நடத்துவதை, ஏடிஜிபி எவ்வாறு தடுக்க முடியும்? என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நமது நிருபர்