73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வித்தியாச ‘கெட்டப்’பில் வந்த பிரதமர் மோடி.!

Scroll Down To Discover

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் தலைப்பாகை அணிவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இது பலராலும் உற்று கவனிக்கப்படும்.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசாக அளித்த தலைப்பாகையுடன் மோடி பங்கேற்றார்.

இந்நிலையில், இந்தாண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன்னர் மோடி, தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது, உத்தர்கண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். அந்த தொப்பியில் அம்மாநில மலர் பிரம்மக்கமலம் பொறிக்கப்பட்டிருந்தது. மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டையும் மோடி தோளில் அணிந்திருந்தார். இதுவும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.