காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி – இரு நாடுகளுக்கிடையிலான உறவு உலகிற்கு நன்மை பயக்கும்.!

இந்தியாஉலகம்

காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி – இரு நாடுகளுக்கிடையிலான உறவு உலகிற்கு நன்மை பயக்கும்.!

காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி –  இரு நாடுகளுக்கிடையிலான உறவு உலகிற்கு நன்மை பயக்கும்.!

இந்தியா-ஆஸ்திரேலியா பிரதமர்கள் இடையே மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடியும் ஆஸதிரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசனை நடத்தினர்.பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுத் தலைவருடன் இருதரப்பு மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாததால் மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிகழ்வானது, ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதை குறிப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.


இந்நிலையில் இரு நாட்டு பிரதமர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு , பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், உலகில் பரவியுள்ள கொடிய வைரசான கொரேனா தொற்று குறித்தும், இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் செழிப்பாக வளர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்திய பிரதமர் மோடி பேசும்போது: ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, இந்திய மக்கள் சார்பில் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்த இதுவே சரியான நேரம். நமதுநட்பை பலப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நமது உறவை பொறுத்து தான், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவும். கொரோனா பிரச்னையை ஒரு வாய்ப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.இரு நாடுகளுக்கிடையிலான உறவு உலகிற்கு நன்மை பயப்பதாகவும் உள்ளது’ என்றும் மோடி பேசினார்.

Leave your comments here...