கோவில் இடத்தை ஆட்டைய போட பார்த்த நில ஆக்கிரமிப்பு கும்பல் : மீட்டெடுத்த இந்து முன்னணி..!

தமிழகம்

கோவில் இடத்தை ஆட்டைய போட பார்த்த நில ஆக்கிரமிப்பு கும்பல் : மீட்டெடுத்த இந்து முன்னணி..!

கோவில் இடத்தை ஆட்டைய போட பார்த்த நில ஆக்கிரமிப்பு கும்பல் : மீட்டெடுத்த இந்து முன்னணி..!

சென்னையில் அதிகம் அறியப்படாத பழைய கோயில்களில் விருகம்பாக்கம் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் இக்கோயிலும் ஒன்று . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகவும் , கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

சுந்தர வரதராஜ பெருமாள் நின்ற நிலையில் கைகளில் சங்கு , சக்ரம் வைத்துக்கொண்டும் மற்ற இரு கைகளால் அபய ஹஸ்த மற்றும் வரத ஹஸ்த உடன் கட்சி அளிக்கிறார் .கோயிலின் செல்லும் போது ஹனுமான் சன்னதி வரும் அதை கடந்து சென்றால் பெருமாளை தரிசனம் செய்யலாம் . ஸ்வாமியின் நேர் எதிரில் இருபுறங்களிலும் பெருந்தேவி தயார் மாற்று, ஆண்டாள் அம்மையாருக்கு தனி சன்னதிகள் உள்ளன .இக்கோயில் 12 நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது என்றும் ஒரு சிலர் இக்கோயில் தொண்டை நாட்டை சேர்ந்த புலியூர் கோட்டத்தை சார்ந்ததது என்றும் கூறுகிறார்கள்.

இந்த கோவில் இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மெட்டுக்குளம் என்ற இடத்தை இஸ்லாமிய நில ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகள் போலியாக லஞ்சம் கொடுத்து வளைத்துப் போட்டார்கள். இதனை கண்டித்து களமிறங்கிய இந்து முன்னணி தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வந்தது.

அந்த இடம் கோவிலுக்கு சொந்தம் என நீதிமன்றம் மூலம் வெற்றி பெற்றுள்ளது. அந்த அனைத்து போலி பட்டாக்களையும் ரத்து செய்து தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் தற்போது இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் தற்போது பாதுகாக்கப்பட்டு உள்ளது..

Leave your comments here...