மேற்கு வங்கத்தில் ஜூன்-1ம் தேதி அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு : மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவது குறையவில்லை. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
All private, public & govt sector offices will open from 8th June, while all tea and jute industries in the state will be 100% operational from 1st June: West Bengal CM Mamata Banerjee. #CoronavirusLockdown https://t.co/phi3HM7hQ1 pic.twitter.com/ChrpHAxNH6
— ANI (@ANI) May 29, 2020
Leave your comments here...