7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது வைகோ குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover

தமிழகத்தில் முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது வைகோ குற்றச்சாட்டு

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள். மாநில அரசே விடுதலை செய்யலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இதற்கு முன்பாகவே, தூக்குத் தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது இவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.

உடனே, மாநில அரசு மூன்றே நாளில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னரிடம் அனுப்பி வைத்தது. ஆனால், கவர்னர் அதை குப்பையில் போட்டுவிட்டார். தற்போது ,தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது. மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இந்தியாவிற்கே வழி காட்டக்கூடிய சமூகநீதி ஆகும் என்றார். கொடநாடு கொலை குறித்து விசாரணை செய்யப்படாது என அதிமுகவினர் கூறுகின்றனரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கொடநாடு கொலை என்பது படுபயங்கர பாதகமான கொலையாகும் அங்கே பணம் மற்றும் நகைகள் ஆவணங்கள் இருப்பதாக செய்யப்பட்ட கொலையாகும்.