தமிழகத்தில் மாநில பட்டியல் இனத்தில் உள்ள உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிடும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன் படி மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வழி செய்யும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்திய அரசமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு வரும் என எதிபார்க்கப்படுகிறது.
Leave your comments here...