7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை – அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

Scroll Down To Discover

பல்லவர் கால முருகன் சிலை ஒன்று, அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து முருகன் சிலை ஒன்று, 23 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து காணாமல் போயிருக்கிறது. இது தற்போது அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சியின் தச்சூர் சிவன் கோயிலுக்குச் சொந்தமான முருகன் சிலை காணாமல் போன நிலையில், தடயம் என்ற இதழ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா – அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில் கடத்தப்பட்ட முருகன் சிலையை தமிழகத்துக்கு மீண்டும் மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.