மலைவாழ் மக்களுக்கு நேரடியாக சென்று உதவிய அமைச்சர்..!
- May 21, 2020
- g-pandian
- : 1130
- CoronaVirus |

திருப்பத்தூர் மாவட்டத்தில். மலை வாழ் பகுதியில் உள்ள மக்களுக்கு அமைச்சர் கேசி.வீரமணி நேரடியாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆக அதிகரித்துள்ளது. 3,435பேர் பலியாகி உள்ளனர். 63,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.132 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைப்போல் தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளன. மேலும் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அன்றாட தேவைக்கான பொருட்களை கூட வாங்க பணமில்லையே என ஏழை, நடுத்தர மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் மலைவாழ் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் கேசி.வீரமணி மலைவாழ் மக்களுக்கு நேரடியாக சென்று பொருட்களை வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்னாமலை, மலைவாழ் மக்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கேசி.வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் மலை வழியாகச் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இதனால் அந்த மக்கள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்கள்.
Leave your comments here...