கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவிற்கு 200 வெண்டிலேட்டர்கள் வழங்கும் அமெரிக்க..!!

இந்தியாஉலகம்

கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவிற்கு 200 வெண்டிலேட்டர்கள் வழங்கும் அமெரிக்க..!!

கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவிற்கு 200 வெண்டிலேட்டர்கள் வழங்கும் அமெரிக்க..!!

இந்தியாவில் மொத்தம் 40,000க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகள் மோசமான கட்டத்தை அடையும்போது, வென்டிலேட்டர்கள் மிகவும் அவசியமாகிறது. போதிய வென்டிலேட்டர்கள் இல்லாத காரணத்தால்தான் அமெரிக்காவில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.அமெரிக்காவில் இருந்து 200 மொபைல் வென்டிலேட்டர்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஒரு வென்டிலேட்டரின் விலை ரூ. 10 லட்சம்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் கோரிக்கையை ஏற்று, ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ என்ற மருந்தை, பிரதமர், நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். இதற்கு பிரதிபலனாக, ‘இந்தியாவுக்கு, 200 வென்டிலேட்டர் சாதனங்கள் அனுப்பப்படும்’ என, டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். இதற்கு, மோடி நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘முதல்கட்டமாக, 50 வென்டிலேட்டர்கள் உடனடியாக அனுப்பப்பட உள்ளது. இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. ‘இது இந்தியாவுக்கு அளிக்கப்படும் பரிசு’ என, யு.எஸ்.எய்ட் எனப்படும் அமெரிக்க உதவி அமைப்பின் இயக்குநர், ரமோனா எல் ஹம்சோவி கூறியுள்ளார்.

இதுகுறித்த தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ”பெரு தொற்று காலத்தில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக நாங்கள் இருப்போம். தடுப்பு ஊசி தயாரிப்பதிலும் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இருவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத விரோதியை விரட்டி அடிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.


ட்ரம்ப்பின் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் நன்றி தெரிவித்து இருந்தார். தனது ட்விட்டர் பதிவில், ”பெருந்தொற்று நோயுடன் நாம் அனைவரும் இணைந்து போரிட்டு வருகிறோம். சுகாதாரத்தில் மேன்மை அடைந்த நாடுகளாக மாற்றுவதற்கும், கொரோனா இல்லாத நாடுகளாக மாற்றுவதற்கும் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். அதிபரின் கருத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

Leave your comments here...