நடமாடும் கிருமிநாசினித் தெளிப்பான் கருவிகளை தயாரித்த விஞ்ஞானிகள்..!

இந்தியா

நடமாடும் கிருமிநாசினித் தெளிப்பான் கருவிகளை தயாரித்த விஞ்ஞானிகள்..!

நடமாடும் கிருமிநாசினித் தெளிப்பான் கருவிகளை தயாரித்த விஞ்ஞானிகள்..!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தின் சிஎஸ்ஐஆர், துர்காபூரிலுள்ள மத்திய இயந்திரவியல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள், நடமாடும் உள்ளரங்கு கிருமிநாசினித் தெளிப்பான் கருவிகள் இரண்டை தயாரித்திருக்கிறார்கள். இந்தக் கருவிகளை, தொற்றக்கூடிய நுண்கிருமிகளை நீக்கி, தூய்மைப்படுத்துவதற்கு, குறிப்பாக மருத்துவமனைகளில் பயன்படுத்த முடியும்

மின்கலன் சக்தியால் இயங்கக்கூடிய கிருமிநாசினி தெளிப்பான் மற்றும் நடமாடும் உள்ளரங்கு கிருமிநாசினிக் கருவி {Battery Powered Disinfectant Sprayer (BPDS) and Pneumatically Operated Mobile Indoor Disinfection (POMID)} என்ற இந்தக் கருவிகள் அடிக்கடி தொடப்படக்கூடிய பகுதிகளான மேஜைகள், கதவுத் தாழ்ப்பாள், குமிழ்கள், மின் விசைகள், கவுண்டர் மேசைகள், கைப்பிடிகள், சாய்வு மேசைகள், தொலைபேசிகள், கணிப்பொறி விசைப்பலகைகள், கழிவறைகள், போன்றவற்றை சுத்தப்படுத்தவும், கிருமிகளை நீக்கவும் பயன்படும்.

இது போன்ற பொருள்களை, தங்களையறியாமல் தொட்டுவிடும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு, இந்தக் கிருமிநாசினிக் கருவிகளை அவ்வப்போது பயன்படுத்துவது உதவும்.

Leave your comments here...