திருநெல்வேலி தொகுதி திமுக எம்பி மீது நிலத்தை அபகரிக்க முயற்சித்தாக கொலை மிரட்டல் வழக்கு பதிவு..!!

தமிழகம்

திருநெல்வேலி தொகுதி திமுக எம்பி மீது நிலத்தை அபகரிக்க முயற்சித்தாக கொலை மிரட்டல் வழக்கு பதிவு..!!

திருநெல்வேலி  தொகுதி திமுக எம்பி மீது நிலத்தை  அபகரிக்க முயற்சித்தாக கொலை மிரட்டல் வழக்கு பதிவு..!!

சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர் பலி வாங்கி வருகிறது கொரோனா. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, உயிர்பலியையும் தடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் பலியாகி உள்ளனர்.அதே சமயம், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை மே 17ம் தேதிக்கும் பின், 4வது முறையாகவும் நீட்டிக்க உள்ளது. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்பலியும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி தொகுதி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினரான ஞான திரவியம் மற்றும் அவரது மகன்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை சேர்ந்த குமாரி பகவதி என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி-யை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவித்திருப்பது என்னவென்றால், நெல்லை திமுக எம்.பி ஞானதிரவியம், தங்களுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவராலும், அவரது குடும்பத்தினராலும் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர்.

குமாரி பகவதி அளித்த புகாரின் அடிப்படையில், பழவூர் போலீசார், ஞானதிரவியம், அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SOURCE: https://www.dinamalar.com/news_detail.asp?id=2539918

Leave your comments here...