50% பணியாளருடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு
- May 15, 2020
- g-pandian
- : 1138
- TN GOVT

வரும் திங்கள் கிழமை ( மே 18) முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மே 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர். இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள் முதல் சனி வரையிலான வாரத்தின் 6 நாட்களும் செயல்படும்.
அனைத்து குரூப் ஏ பணியாளர்கள் வாரத்தின் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் பணியாளர்கள், எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் ஏற்கனவே செயல்படும் முறையிலேயே தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...